கோவில்பட்டியில் ஸ்ரீ மருத்துவமனை திறப்பு
By கோவில்பட்டி | Published on : 13th June 2015 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் அஞ்சல் நிலையம் எதிரே ஸ்ரீ மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சீனிவாசன் தலைமை வகித்தார். மருத்துவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் ஸ்ரீவெங்கடேஷ், லதா ஸ்ரீவெங்கடேஷ், கெளதம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் வரவேற்றனர். புதிய மருத்துவமனையை கிருஷ்ணம்மாள் சீனிவாசன் திறந்து வைத்தார். மருத்துவர்கள் ரெங்காலட்சுமி, ரமா வெங்கடேஷ், லாவண்யா ஸ்ரீதர், தொழிலதிபர்கள் சரோஜா சுப்பையா, சிவகாமி ரெங்கசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இதில், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், தொழிலதிபர்கள் என்.வெங்கடாசலபதி, எம்.பரமசிவம், கோவிந்தராஜ், எம்.ராமச்சந்திரன், ஆர்.செல்வமோகன், ஜேக்கப்ராஜாமணி, கே.ராஜா, மருத்துவர்கள் தாமோதரன், ராமானுஜம்மோகன், தாயப்பா கார்த்திகேயன், கமலவாசன், கமலா மாரியம்மாள், மதனகோபால், முற்போக்கு பேரவை மாவட்டத் தலைவர் முத்துக்குமார், மாநிலச் செயலர் சத்தியபாலன், இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலர் பாலமுருகன், தனிப்பிரிவு காவலர் தாமோதரன், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.