சுடச்சுட

  

  செய்துங்கநல்லூர் அருகே உள்ள சந்தையடியூர் சிவனைந்தபெருமாள், பேச்சியம்மன், ஸ்ரீவேலங்காட்டு சுடலை மாடசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  இதனை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தனலட்சுமி ஹோமம், லட்சுமி ஹோமம், கோமாதா பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கருங்குளம் தாமிரவருணி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது. இதில் காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம் ஆகியன நடைபெற்றது. இரவு 10 மணிக்கு யந்திரஸ்தாபனம், நவரத்ன ஸ்தாபனம் நடைபெற்றது. 

  வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. காலை 9.15 மணிக்கு யாத்ராதானம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மேல் விமானத்துக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவனைந்த பெருமாள், பேச்சியம்மன், ஸ்ரீவேலங்காட்டு சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்தி மூலஸ்தானத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூலஸ்தானங்கள் மற்றும் அம்பாள், சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai