Enable Javscript for better performance
தொழிலாளி தற்கொலை - Dinamani

சுடச்சுட

    

    கழுகுமலையில் குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் உலகையா மகன் கண்ணன் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இதனால் அவருக்கும், அவரது மனைவி சங்கரேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

    இந்நிலையில் வியாழக்கிழமை மது அருந்திவிட்டு வந்த கண்ணனுக்கும், சங்கரேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் இரவு சுமார் 10.30 மணிக்கு கண்ணன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தாராம்.

    இதையடுத்து அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

    இதுகுறித்து கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai