சுடச்சுட

  

  நாசரேத் அருகே குப்பாபுரத்தில் சினிமா படப்பிடிப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  ஸ்ரீ சாய் பிக்சர்ஸ் சார்பில் மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து சர்பத் என்ற திரைப்படம் நாசரேத் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்படுகிறது.

  இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகன்களாக விஷ்வா, மதி, அஜய், கதாநாயகிகளாக கமலி, கமலம், நிநிகா உள்பட பலர் நடிக்கின்றனர்.

  படப்பிடிப்பு நாசரேத், குப்பாபுரம், தென்காசி,திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறவுள்ளதாக இயக்குநர் தெரிவித்தார்.

  இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் தேவராஜ், நாசரேத் அருகே உள்ள குப்பாபுரத்தைச் சேர்ந்தவர்.

  இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா குப்பாபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் குரு மத்தேயுஜெபசிங், படப்பிடிப்பை தொடங்கிவைத்தார். நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் மாமல்லன் கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர்கள் அன்பு என்ற தங்கபாண்டியன், வெஸ்லிஜோயல், சாமுவேல், பாரதி உள்ளிட்ட சினிமா படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai