Enable Javscript for better performance
பைக் விபத்து: குழந்தை உள்பட இருவர் சாவு - Dinamani

சுடச்சுட

    

    கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த பைக் விபத்தில் 4 வயது குழந்தை உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    கயத்தாறையடுத்த தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் பெயிண்டர் சின்னராஜ் (23). இவர், இவரது உறவினர் மதுரையைச் சேர்ந்த அருள்ஜீவா மனைவி மகேஸ்வரி (25), அவரது மகள் வெனிசா(4), தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த அருணாசலம் மகள் நாகலட்சுமி(18) ஆகிய 4 பேரும் பைக்கில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பைக் கயத்தாறு - கடம்பூர் சாலை நொச்சிகுளம் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், சின்னராஜ் மற்றும் வெனிசா இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நாகலட்சுமி மற்றும் மகேஸ்வரி இருவரும் காயமடைந்தனர்.

    தகவலறிந்த கயத்தாறு போலீஸார் காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai