சுடச்சுட

  

  சாத்தான்குளம் செட்கோ-சிசிஎப் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், மணப்பாடு கிராம அறிவாற்றல் மையம் சார்பில் பேரிடர் ஒத்திகைப் பயிற்சி முகாம் மணப்பாட்டில் நடைபெற்றது.

  முகாமிற்கு உடன்குடி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பிரதீபன் தலைமை வகித்தார். பேரிடர் காலங்களில் உயிரிழப்பு, பொருள் சேதத்தை குறைப்பதற்கான வழிமுறைகள், பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முதலுதவிகள் உள்ளிட்டவை குறித்து கிராம இளைஞர்கள், மீன் பிடித் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கிராம அறிவாற்றல் மையத் தலைவர் சேசையா, செயலர் பென்சிகர், செட்கோ ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின், திட்ட அலுவலர் பால்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செட்கோ களப்பணியாளர் ஜெயசுதா செய்திருந்தார். ஸ்டாலின் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai