சுடச்சுட

  

  சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வீடுகளில் தனிநபர் கழிவறை இல்லாதவர்கள் அரசு மானியத்துடன் அமைக்கலாம் என வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுமயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராமங்களில் திறந்தவெளியில் அசுத்தம் செய்வதினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை  தடுக்கும் வகையில், சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளிலும் அனைத்து வீடுகளிலும் கழிவறை அமைக்க அரசு நிதியுதவி அளித்து வருகிறது. அதன்படி வீட்டில் கழிவறை அமைக்க மானியமாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுகிறது.

  கிராமங்களில் வீடுகளில் கழிவறை அமைக்காதவர்கள் கிராம ஊராட்சி அலுவலகம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். கழிவறை கட்டி முடிக்கப்பட்டதும் அதற்கான மானியம் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான முழு விவரத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai