சுடச்சுட

  

  ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு எம்எல்ஏ நிதி ரூ. 37.5 லட்சம் ஒதுக்கீடு

  By ஆறுமுகனேரி  |   Published on : 14th June 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,  ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.37.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

  ஆறுமுகனேரி பேரூராட்சி 7வது வார்டு அடைக்கலாபுரத்தில் மாதா கோயிலுக்கு செல்லும் சாலையை பேவர் பிளாக் சாலையாக அமைத்திட ரூ. 17.5 லட்சம், அப்பகுதியில் அங்கன்வாடி கட்டடம் கட்ட ரூ. 7 லட்சம், 8 ஆவது வார்டு ராணிமகராஜபுரத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்திட ரூ. 5 லட்சம், 11 ஆவது வார்டு காமராஜபுரத்தில் அங்கன்வாடி மையம் கட்ட ரூ. 7 லட்சம், 17 ஆவது வார்டு குதிரைக்காரன் குண்டிற்கு செல்லும் வாய்க்காலில் சிறு பாலம் அமைத்திட ரூ. 1 லட்சம் உள்பட ரூ 37.5 லட்சத்தை  திட்டப் பணிகளுக்காக எம்.எல்.ஏ. ஒதுக்கீடு செய்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai