இலவச யோகா பயிற்சி நிறைவு விழா
By ஸ்ரீவைகுண்டம் | Published on : 14th June 2015 03:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்ரீவைகுண்டத்தில் இலவச யோகா பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் உத்தரவின்படி சிறுவர், சிறுமியருக்கான இலவச யோகா பயிற்சி ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்றுநர் இசக்கிமுத்து பயிற்சி அளித்தார்.
பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு கோயில் செயல் அலுவலர் சிவராம்பிரபு தலைமை வகித்தார். ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஆனந்தன், ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர் சிவபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் பொன்பாண்டி வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. யோகா பயிற்றுநர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.