Enable Javscript for better performance
உடன்குடி அருகே ஊர்ப் பெயர் அழிப்பு: 18 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே ஊர்ப் பெயர் அழிப்பு: 18 பேர் மீது வழக்கு

    By உடன்குடி  |   Published on : 14th June 2015 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடன்குடி அருகே பேருந்து நிறுத்தங்களில் ஊர்ப் பெயர்களை அழித்தது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட கிராமம் மெய்யூர். இப்பகுதி மக்கள் உடன்குடி-திசையன்விளை சாலையில் மெய்யூர் எனும் புதிய பெயர்ப் பலகையை அமைத்தார்களாம். இதற்கு அருகில் உள்ள வெங்கட்ராமானுஜபுரம் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனராம்.

    இந்நிலையில், மெய்யூர் பகுதியில் பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் எழுதப்பட்டிருந்த மெய்யூர் என்னும் பெயரை சிலர் அழித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, போலீஸார் இரண்டு ஊர் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அழிக்கப்பட்ட பெயர்கள் மீண்டும் எழுதப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதற்கிடையே, பேருந்து நிறுத்தம் அருகில் எழுதப்பட்டிருந்த வெங்கட்ராமானுஜபுரம் ஊர்ப் பெயரை சிலர் அழித்தனர். இதுகுறித்தும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, மெஞ்ஞானபுரம் போலீஸார் இருதரப்பைச் சேர்ந்த 18 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சனிக்கிழமை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஊர்ப் பெயர் பொறித்த பலகைகளை அகற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai