சுடச்சுட

  

  எட்டயபுரத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரிக்கை

  By எட்டயபுரம்  |   Published on : 14th June 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எட்டயபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலமாக சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் விநியோகத்தின்போது உப்பு நீர் கலப்படம் செய்யப்படுவதாக, அப்பகுதியினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

  இதுகுறித்து விவசாயிகள் சங்க வட்டச் செயலர் நடராஜன் கூறியது: எட்டயபுரத்தில் சீவலப்பேரி குடிநீர் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் உப்புநீர் கலப்படம் செய்யப்பட்டு வருவதால் குழந்தைகள், வயோதிகர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு கலப்படம் இல்லாத சுத்தமான குடிநீரை விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

  இதுகுறித்து எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அலுவலர் குற்றாலிங்கம் கூறியது: சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் கயத்தாறு, கழுகுமலை வழியாக எட்டயபுரம் வருகின்ற குடிநீரைத்தான் சுத்தப்படுத்தி எட்டயபுரத்தில் உள்ள வார்டுகளுக்கு சுழற்சி முறையில் விநியோகம் செய்கிறோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai