Enable Javscript for better performance
கடனுதவி வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே வேப்பங்காட்டில் கிராமப்புற மகளிருக்கு மாடு வளர்ப்பதற்கான கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

     லட்சுமிபுரம் நீர்வடிப்பகுதி கிராமக் குழு, மகளிர் கூட்டமைப்பு, முதலூர் வீட்ஸ் நிறுவனம், நபார்டு வங்கி, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு லட்சுமிபுரம் நீர்வடிப்பகுதி குழுத் தலைவர் ஆதிலிங்கம் தலைமை வகித்து தலா ரூ. 20,000 வீதம் 8 பெண்களுக்கு கடனுதவி வழங்கினார். நிகழ்ச்சிக்கு முதலூர் வீட்ஸ் நிறுவன இயக்குநர் சார்லஸ் முன்னிலை வகித்தார். இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அய்யப்பன், ஜானி சாமுவேல், பொறியாளர் இருளப்பன், பணியாளர் மேகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். களப்பணியாளர் சாந்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai