சுடச்சுட

  

  கந்து வட்டி வசூலித்ததாக ஒருவர் மீது வழக்கு

  By தூத்துக்குடி  |   Published on : 14th June 2015 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரிடம் கந்து வட்டி வசூலித்ததாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  தூத்துக்குடி ரோச் காலனியைச் சேர்ந்த அலங்காரம் மகன் ராஜேஷ் (33). தனியார் நிறுவன ஊழியர். இவர், ஜார்ஜ் சாலை மணல் தெருவைச் சேர்ந்த அண்டோவிடம் ரூ. 75 ஆயிரம் கடன் பெற்றிருந்தாராம். இதற்கு மாதம் 10 சதவீத வட்டியை அண்டோ வசூலித்தாராம். இதுவரை ரூ. 25 ஆயிரம் செலுத்திய நிலையில், உடனடியாக அசல், வட்டி ஆகியவற்றை திருப்பித் தருமாறு ராஜேஷிடம் அண்டோ கூறினாராம். மேலும், தன்னை இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும் மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாரிடம் ராஜேஷ் புகார் அளித்தார்.

  இதையடுத்து கந்து வட்டி வசூலித்தல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அண்டோ மீது தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai