Enable Javscript for better performance
தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி

    By சாத்தான்குளம்  |   Published on : 14th June 2015 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத், முதலூரில் நடைபெற்ற தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்திய விழிப்புணர்வுப் பேரணியை சாத்தான்குளம் டிஎஸ்பி கனகராஜ் தொடங்கிவைத்தார்.

    நாசரேத்தில் நடைபெற்ற பேரணிக்கு காவல் உதவி ஆய்வாளர் ராஜகுமாரி முன்னிலை வகித்தார். பேரணி நாசரேத் புனித லூக்கா மருத்துவமனை பஜாரிலிருந்து புறப்பட்டு, பேருந்து நிலையம் வரை வந்து நிறைவடைந்தது. இதில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் தங்ககிருஷ்ணன், எஸ்.பி தனிப்பிரிவு தலைமைக் காவலர் டேவிட், காவலர்கள் முருகேசன், முருகன், அந்தோணி, ஜெயசேகர், மணிகண்டேஸ்வரன், முருகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற  விழிப்புணர்வுப் பேரணிக்கு முதலூர் ஊராட்சித் தலைவர் மீனாமுருகேசன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பொன்முருகேசன், தலைமையாசிரியர் சோபிதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் பள்ளியில் வந்து நிறைவடைந்தது. இதில்  தட்டார்மடம்  உதவி ஆய்வாளர்கள்  நாராயணன்,  குமாரமுத்து மற்றும் காவலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். தலைமைக்காவலர்  ரவிச்சந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் ராபின்சன் செய்திருந்தார்.

    திருச்செந்தூர்: திருச்செந்தூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கோ.பத்மநாப பிள்ளை தொடங்கி வைத்தார். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் எஸ்.நம்பிராஜன் முன்னிலை வகித்தார்.

    பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். அப்போது போக்குவரத்து போலீஸார், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். பேரணி காமராஜர் சாலை, நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai