சுடச்சுட

    

    திருச்செந்தூரில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்செந்தூரில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சனிக்கிழமை காலையில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கோ.பத்மநாப பிள்ளை சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் பச்சை, மஞ்சள் கலரில் சாரமும், பனியனும் அணிந்திருந்தராம். இவர் யார் எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai