சுடச்சுட

  

  திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் ரூ. 21 லட்சம் நலத்திட்ட உதவிகள்

  Published on : 14th June 2015 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

  திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தலைமை வகித்து, ரூ. 12 லட்சத்து 48 ஆயிரத்து 800-க்கான நலத்திட்ட உதவிகளையும், 6 குடும்பத்திற்கு புதிய குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

  இதில் திருமண உதவித்தொகையாக 70 பேருக்கு ரூ. 6 லட்சத்து 28 ஆயிரமும், இறப்பு நிவாரண உதவித்தொகையாக 38 பேருக்கு ரூ. 4 லட்சத்து 12,500, கல்வி உதவித்தொகையாக 74 பேருக்கு ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 300 வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஞானசேகரன், திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் (பொ) தொ.ராஜநளா, ஊராட்சி ஒன்றியத் தலைவர் லி.ஹேமலதா லிங்ககுமார், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவி அபிதா ஷேக், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் குமார், மண்டல துணை வட்டாட்சியர் இரா.ரகு, சமூக பாதுகாப்புத் திட்ட துணை வட்டாட்சியர் அழகம்மை, வருவாய் ஆய்வாளர் அ.பாலசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் வரவேற்றார். வட்டாட்சியர் சொ.வெங்கடாசலம் நன்றி கூறினார்.

  சாத்தான்குளம்:  சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 340 பேருக்கு ரூ. 8.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

  விழாவுக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ. தியாகராஜன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் ப. வாலசுப்பிரமணியன் வரவேற்றார்.  இதில், ஆட்சியர் ம.ரவிகுமார் கலந்துகொண்டு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  திருமண உதவித்தொகை, இறப்பு நிவாரணத்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை என 340 பேருக்கு ரூ. 8.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

  இதில், பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் கணேஷ்குமார், சின்னத்துரை, ராஜராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் சத்தியராஜ், முருகன், மணிகண்டன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் து. செந்தூர்ராஜன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai