சுடச்சுட

    

    படுக்கப்பத்து பள்ளியில் மாற்றுப் பள்ளி மையம் தொடக்கம்

    By சாத்தான்குளம்  |   Published on : 14th June 2015 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் கல்வி பயில மாற்றுப் பள்ளி இணைப்பு மையம் தொடங்கப்பட்டது.

    சாத்தான்குளம் வட்டார வளமையத்தில் பெரியதாழை, படுக்கப்பத்து ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் மொத்தம் 27 இடைநின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டனர்.  இதில் 10 மாணவர்கள் பயிலும் வகையில் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்  பள்ளியில் மாற்றுப் பள்ளி இணைப்பு மையம் தொடங்கப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் க.நரசிம்மன்  தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீ.மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

    இதில் ஆசிரிய பயிற்றுநர்கள் வி.முத்துலட்சுமி,சாந்தி, பள்ளி ஆசிரியர் ஜெபராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு  மையத்தில் கல்வி போதிப்பதற்காக ஆசிரியர்  டி.கவிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai