சுடச்சுட

  

  வாலிபால்:  எஸ்ஆர்எம் பல்கலை. அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

  By தூத்துக்குடி  |   Published on : 14th June 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

  தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும், தூத்துக்குடி மாவட்டக் கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான 24 ஆவது அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

  ஆண்கள் பிரிவில் 7 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன. ஆறாம் நாளான சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியும், கேரள மாநில மின்வாரிய அணியும் மோதின.

  இந்தப் போட்டியை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இயக்குநர் விக்கிரமன், தமிழ்நாடு கைப்பந்து கழக பொதுச்செயலர் சித்திரைப்பாண்டியன், விருதுநகர் மாவட்ட கைப்பந்துக் கழகச் செயலர் துரைசிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியினர் 25:23 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினர். இதையடுத்து,  சுறுசுறுப்படைந்த கேரள மின்வாரிய அணியினர் தங்களது திறமையை வெளிப்படுத்தி 25:21என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினர்.

  இரு அணிகளும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் போட்டி விறுவிறுப்படைந்தது. இருப்பினும், ரசிகர்களுடன் ஆராவாராத்துடன் அடுத்த இரண்டு செட்களையும் 25:18, 25:18 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி இறுதியில் 3:1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai