சுடச்சுட

  

  விளாத்திகுளத்தில் பேருந்தில் பயணியிடம் திருட்டு: பெண் கைது

  By விளாத்திகுளம்  |   Published on : 14th June 2015 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விளாத்திகுளத்தில் பேருந்தில் பயணியிடம் திருட்டில் ஈடுபட்டதாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

   விளாத்திகுளம் வட்டம் வில்வமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி முத்துலட்சுமி (21). இவர் வெள்ளிக்கிழமை இரவு கோவில்பட்டியிலிருந்து விளாத்திகுளத்திற்கு அரசுப் பேருந்தில் சென்றாராம்.

  விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து சென்றதும், முத்துலட்சுமி பேருந்திலிருந்து இறங்க முயற்சிக்கும் போது தனது  பேக் பிளேடால் வெட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ. 2,400 திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.

   இதையடுத்து நடத்துனர் சத்தியசீலன் (50) பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராணி தலைமையிலான போலீஸார் பேருந்து நிலையம் சென்று திருட்டு நடைபெற்ற அரசுப் பேருந்தில் பயணிகளின் பொருள்களை சோதனையிட்டனர்.

  இதில் பேருந்தில் முத்துலட்சுமியின் இருக்கைக்கு பின்புறம் அமர்ந்து பயணித்த  தூத்துக்குடி 4 ஆம் கேட் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மனைவி செல்வி (32) என்பவர் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், செல்வியை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2400 மற்றும் பிளேடு, கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai