Enable Javscript for better performance
ஸ்டெர்லைட் ஊழியர்கள் 105 பேர் ரத்த தானம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன ஊழியர்கள் 105 பேர் சனிக்கிழமை ரத்த தானம் செய்தனர். மேலும், எச்ஐவி பாதித்த மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியினபோது, ஸ்டெர்லைட் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 105 பேர் ரத்ததானம் செய்தனர்.

    மேலும்,  ஸ்டெர்லைட் காப்பர் பணியாளர்கள் பங்களிப்பில் எச்ஐவி கிருமி பாதித்த 77 குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மருத்துவக் கல்லூரி முதன்மையர் சாந்தகுமார் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில்,  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன வணிக பிரிவுத் தலைவர் தனவேல், தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் சமுதாய வளர்ச்சித்துறை தலைவர் கைலாசம், நிதித்துறை பொதுமேலாளர் அஜய் ஜாஜூ,  அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமனி,  ரத்தவங்கி மருத்துவ அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai