சுடச்சுட

  

  ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றங்களில் லோக் அதாலத்

  By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 14th June 2015 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத் முகாமில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

  ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜேனசன் ஞானையா தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆஸாகெளசல்யா சாந்தினி, உறுப்பினர் வழக்குரைஞர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதைபோல், ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற முகாமிற்கு  மாஜிஸ்ரேட் முருகன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் வழக்குரைஞர் பெருமாள் பிரபு, பேராசிரியர் ஜெபசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில், பிறப்பு, இறப்பு, வங்கி தீர்வுகள், செக்மோசடி உள்பட 319 வழக்குகளில் ரூ. 15லட்சத்து 69 ஆயிரத்து 500 க்கு தீர்வு காணப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai