சுடச்சுட

  

  22 இல் மாற்றுத் திறனாளிகளின் மாநில மாநாடு தொடக்கம்

  By கோவில்பட்டி  |   Published on : 14th June 2015 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் ஜூன் 22 இல் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில மாநாடு தொடங்குகிறது.

  இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலச் செயலர் நம்புராஜன் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இச் சங்கத்தின் முதல் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. சுமார்  4 ஆண்டுகளுக்குப் பிறகு  2 ஆவது மாநில மாநாடு கோவில்பட்டியில் இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான முக்கிய பிரச்னைகள் குறித்தும், அதனை வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன என்றார் அவர்.  அமைப்பின் மாநிலத் தலைவி ஜான்சிராணி கூறுகையில், தமிழகத்தில் 22 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக அரசு அங்கீகரித்துள்ளது. அவர்களுக்கு போதிய பாதுகாப்புகள் அளிக்கவும், மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை விட அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும் வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

  ஜூன் 22 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை பேரணி நடைபெறுகிறது.

  தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பிருந்தா கராத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 23 ஆம் தேதி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள் கெளரவிக்கப்பட உள்ளனர் என்றார் அவர்.

  பேட்டியின் போது, மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முத்துகாந்தாரி, முருகன், சக்திவேல்முருகன், தெய்வேந்திரன், அய்யலுசாமி, சாலமன் டேனியல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai