சுடச்சுட

  

  ஆறுமுகனேரி ஸ்ரீ சோமநாத சுவாமி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

  By ஆறுமுகனேரி  |   Published on : 15th June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  இதையொட்டி சனிக்கிழமை விநாயகர் திருவிழா நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமமும், மாலையில் நால்வர் சுவாமிகள் புறப்பாடும், இரவில் திருக்காப்பு கட்டுதலும் நடைபெற்றன.

  இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு கும்பபூஜை, ஹோமம் நடைபெற்றன. காலை 7 மணிக்கு கொடிப்பட்டம் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு 16 வகை சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், சோடக தீபாராதனையும் நடைபெற்றன.

  இதில், பக்த ஜன சபைத் தலைவர் எம்.எஸ்.எஸ். சண்முகவெங்கடேசன், செயலர் பி.கே.எஸ்.கந்தையா, பொருளாளர் எஸ்.அரிகிருஷ்ணன், நகர்நல மன்றத் தலைவர் பூபால்ராஜன், கோயில் மணியம் சுப்பையா, சைவ வேளாளர் சங்கத் தலைவர் ஜெ.சங்கர லிங்கம், அரிமா சங்கத்தைச் சேர்ந்த ஜெ.நடராஜன், தொழிலதிபர்கள் தவமணி, செல்வபெருமாள், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரேணுகாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  மாலையில் திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப் பணி திருவீதி உலாவும், இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றன.

  இம்மாதம் 20 ஆம் தேதி காலையில் ஸ்ரீசிவகாமி அம்பாள் உடனுறை ஸ்ரீநடராஜர் மூர்த்தி காப்புக் கட்டுதல், உருகு சட்டசேவை, இரவில் ஸ்ரீநடராஜபெருமாள் சிகப்பு பூஞ்சப்பரத்தில் சிவப்பு பட்டு அணிந்து, செம்மலர் சூடி (ஸ்ரீ ருத்ர ஸ்வரூபமாக) சிவப்பு சாத்தி சப்பரத்தில் திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெறுகின்றன. 21 ஆம் தேதி காலை ஸ்ரீநடராஜமூர்த்தி வெண் பூஞ்சப்பரத்தில் வெண்பட்டு உடுத்தி வெள்ளைசாத்தி திருவீதி உலாவும், இரவில் ஸ்ரீஆனந்த நடராஜர், சிவகாமி அம்மனுடன் பத்ர பூஞ்சப்பரத்தில் பச்சை பட்டாடை உடுத்தி வில்வம், மரிக்கொழுந்து மற்றும் பச்சை இலை மாலை அணிந்து (மகா விஷ்ணு ஸ்வரூபமாக) பச்சை சாத்தி திருவீதி உலா வருதலும் நடைபெறுகின்றன.

  23ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல், தீர்த்தவாரி அபிஷேகம், இரவில் சுவாமி, அம்பாள் சப்தாவர்ணக் காட்சி திருவீதி உலாவும் நடைபெறும்.

  விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்தாரும், பக்த ஜன சபையினரும் செய்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai