சுடச்சுட

  

  தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலகம் மற்றும் கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மாளவியா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

  முகாமுக்கு காவல் ஆய்வாளர் தங்ககிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் வேலு, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். முகாமில் பல்வேறு கண் நோய்களுக்கு சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில், பங்கேற்ற நூற்றுக்கும் மேற்வட்டவர்களில் 22 பேர் இலசவ அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தன்னார்வ தொண்டர் முருகசெல்வி நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai