சுடச்சுட

    

    எட்டயபுரம் அருகே ஆட்டோ- பேருந்து மோதல்: 4 பேர் காயம்

    By எட்டயபுரம்,  |   Published on : 15th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி பகுதியில் சனிக்கிழமை இரவு பயணிகள் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

    எட்டயபுரம் வட்டம், தலைக்காட்டுபுரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகள் ராசம்மாள்(24), முத்துப்பாண்டி மகள் மாரித்தாய்(35), பேச்சியம்மாள் மகள் முத்துசெல்வி (20). இவர்கள் எட்டயபுரத்தில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்கள் வழக்கம்போல் வேலைகளை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு பயணிகள் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனராம். அப்போது எட்டயபுரம் - விளாத்திகுளம் சாலையில் உள்ள படர்ந்தபுளி பாலம் அருகே விளாத்திகுளத்திலிருந்து கோவில்பட்டி சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது.

    இதில், ஆட்டோ ஓட்டுநரான மாரிமுத்து உள்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநரான பேரிலோவன்பட்டியைச் சேர்ந்த முத்துவேல் மகன் ஜெயராஜிடம் (32) எட்டயபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai