சுடச்சுட

    

    கோவில்பட்டியில் முன்னாள் ராணுவத்தினர் பேரணி, ஆர்ப்பாட்டம்

    By கோவில்பட்டி,  |   Published on : 15th June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் முன்னாள் ராணுவத்தினர் சார்பில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்பதை வலியுறுத்தி, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு அகில இந்திய துணை பொதுச் செயலர் கேசவன் தலைமை வகித்தார். கிளை முன்னாள் ராணுவத்தினர், முப்படை வீரர்கள் உதவி நல மைய துணைத் தலைவர் இருளாண்டி, செயலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கேப்டன் ஜெயராமகிருஷ்ணன் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் வழங்கிடும் ஆணையை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், கால தாமதம் செய்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ரயில் நிலையம் முன் சென்றடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில், கோவில்பட்டி, விளாத்திகுளம், சங்கரன்கோவில், கயத்தாறு, கழுகுமலை, எட்டயபுரம், பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai