Enable Javscript for better performance
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 15th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சுபா நகரில் மயானம் அமைப்பது குறித்த சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

    சுபா நகரில் சுமார் 400 குடியிருப்புகள் உள்ளன. சுபா நகர், இனாம்மணியாச்சி, அய்யனேரி, அப்பனேரி ஆகிய ஊராட்சி மன்றங்களுக்குள்பட்டதாக உள்ளது. எனவே, அந்தந்த ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சுபா நகரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சனிக்கிழமை இறந்ததையடுத்து இளையரசனேந்தல் சாலையில் காலியிடத்தில் சடலத்தை எரிப்பதற்காக அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இதையறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர், சம்பந்தப்பட்ட குடியிருப்பு உள்ள ஊராட்சி மன்றத்துக்குள்பட்ட மயானத்தில் மூதாட்டியின் இறுதிச்சடங்கு நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து சுபா நகருக்கு என தனியாக மயானம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜோதி முன்னிலையில் சனிக்கிழமை மாலை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

    நகர ஊரமைப்பு இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் சுமார் 66 சென்ட் பொது உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மயானம் அமைப்பதற்கு தேவையான பகுதியைத் தேர்ந்தெடுத்து உரிய முறையில் அனுமதி பெற்று பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai