சுடச்சுட

    

    சிற்றுந்து நடத்துநர் மீது தாக்குதல்: கூலித் தொழிலாளி கைது

    By கோவில்பட்டி  |   Published on : 15th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகே சிற்றுந்து நடத்துநரைத் தாக்கியதாக கூலித் தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (19). சிற்றுந்து நடத்துநர். இவர் சனிக்கிழமை கூசாலிபட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரா. கருத்தப்பாண்டி (39) சிற்றுந்து நடத்துநர் மீது மோதினாராம்.

    இதையடுத்து இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், கூலித் தொழிலாளி, சிற்றுந்து நடத்துநரைத் தாக்கினாராம்.

    இதுகுறித்து, சிற்றுந்து நடத்துநர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, கூலித் தொழிலாளி கருத்தப்பாண்டியை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai