Enable Javscript for better performance
துப்புரவு மேற்பார்வையாளர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    துப்புரவு மேற்பார்வையாளர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 15th June 2015 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசு நகராட்சி மற்றும் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்றது.

    இக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ஜீவா தலைமை வகித்தார். கெüரவத் தலைவர் அருணாசலம் கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.

    கூட்டத்தில், கல்வித் தகுதியை மாற்றுதல், அடிப்படை ஊதியத்தை மாற்றுதல், கிரேடு பே, வீட்டு வாடகைப்படி, வாகனப்படி ஆகியவற்றை உயர்த்த வேண்டும்; துப்புரவு ஆய்வாளர் பயிற்சிக்கு மேற்பார்வையாளர் மற்றும் களப் பணி உதவியாளர் பெயர் பட்டியல் தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் வனராஜ், பொதுச்செயலர் கே.செல்வராஜ், மாநில மகளிரணி பொதுச்செயலர் வரலட்சுமி உள்பட மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    கோவில்பட்டி கிளை சங்கச் செயலர் மாரியப்பன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கிளைத் தலைவர் பட்டாணி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கனி நன்றி கூறினார்.

    விழா ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai