சுடச்சுட

    

    திமுக தலைவர் மு. கருணாநிதி 92ஆவது பிறந்த நாளையொட்டி, சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியச் செயலர் எஸ். பார்த்திபன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர்கள் ராஜ்மோகன் செல்வின், ஜோதி டேவிட், வழக்குரைஞர் ஆறுமுகபெருமாள், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வி.கே.ஏ.பி. காசியானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் என். பெரியசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டார். இதில், ஒன்றிய அவைத் தலைவர் கோயில்ராஜ், ஆழ்வார்திருநகரி நகரச் செயலர் முத்துராமலிங்கம், ஒன்றிய துணைச் செயலர்கள் சக்திகனி சாமுவேல், சிவசுப்பிரமணியன், பாலசந்தர், மாவட்டப் பிரதிநிதிகள் தூண்டில்மாடன், அருள்ராஜ், முத்துப்பாண்டி, அந்தோணி ஜெரால்டு, ஒன்றியப் பொருளாளர் பட்சிமுருகன், நாசரேத் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாமல்லன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai