சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே முதலூரில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைதீர் முகாம் நடைபெற்றது.

    ஊராட்சித் தலைவர் மீனாமுருகேசன் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் கிதிர் முகைதீன், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.

    முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் பொன் முருகேசன் வரவேற்றார். குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட 54 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சிறப்பு வருவாய் ஆய்வாளர் சந்திரகுமார், கிராம நிர்வாக அலுவலர் முருகன், கிராம வருவாய் உதவியாளர் டேவிட் சிங்கம், ஊராட்சிச் செயலர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai