Enable Javscript for better performance
மது விற்பனை: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கழுகுமலையில் மதுக்கூடத்தில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    கழுகுமலையில் உள்ள மதுக்கூடத்தில் மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

    இதையடுத்து உதவி ஆய்வாளர் தர்மராஜ் தலைமையிலான போலீஸார் மேல கேட் அருகேயுள்ள மதுக்கூடத்துக்குச் சென்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், மதுக்கூட உரிமையாளரான அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கா.கிருஷ்ணசாமியை (45) கைது செய்தனர்.

    இதேபோல் உடைமரத்துகண்மாயில் உள்ள மதுக்கூடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் அதன் உரிமையாளரான புதுகுளத்தைச் சேர்ந்த க.தன்னாசியை (30) கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai