சுடச்சுட

  

  கோவில்பட்டியையடுத்த சிவனணைந்தபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  மழை, மக்கள் நலன் வேண்டி அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் மற்றும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலில் ஜோதி சங்கமத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 7 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஞ்சள், பால், இளநீர் உள்பட 21 வகையான மூலிகைப் பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

  அதனைத் தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி ஜோதிலிங்கம் பட்டு மஹால் உரிமையாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai