Enable Javscript for better performance
அபாய நிலையில் பொருள் பாதுகாப்பறை: அகற்றக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அபாய நிலையில் பொருள் பாதுகாப்பறை: அகற்றக் கோரிக்கை

    By திருச்செந்தூர்  |   Published on : 16th June 2015 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள திருச்செந்தூர் கோயில் பொருள்கள் பாதுகாப்பறையை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் பிச்சிவிளை வி.எம்.சுதாகர் அளித்துள்ள மனு:

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட மிதியடி மற்றும் பொருள்கள் பாதுகாப்பறையில் அரச மரம் முளைத்து கட்டடத்தின் உள்பகுதியில் வேரூன்றி காணப்படுகிறது. எனவே, கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இக்கட்டடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என  மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai