சுடச்சுட

    

    ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

    ஆறுமுகனேரி காமராஜபுரம் சின்னத்துரை மகன் சுயம்புலிங்கம் (24). இவர் சேர்ந்தபூமங்கலத்திலுள்ள தனியார் மணல் ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியிலிருந்து ஆறுமுகனேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ஆத்தூர் அருகே நரசன்விளை சாலையில்,  நாகர்கோவிலிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதாம். இதில் தூக்கிவீசப்பட்ட சுயம்புலிங்கம் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்கென ஆத்தூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    விபத்து குறித்து, ஆத்தூர் பயிற்சி உதவி ஆய்வாளர் கதிரேசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai