Enable Javscript for better performance
இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி மடத்துவிளை சந்தனசம நடுநிலைப் பள்ளிக்கு, கல்விக்கு உதவுவோம் குழு சார்பில் இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு, பள்ளித் தாளாளர் பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார் தலைமை வகித்தார். பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன நிர்வாக உதவித் தலைவர்  மேகநாதன் மாணவர், மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.  கல்விக்கு உதவுவோம் குழு சார்பில் ஆறுமுகனேரி சுற்றுப்பகுதியிலுள்ள சுமார் 600 மாணவர், மாணவிகளுக்கு இலவச  நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியை குழந்தைசெல்வி, டிசிடபிள்யூ துணை மேலாளர் சித்திரைவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கல்விக்கு உதவுவோம் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.லூர்துசேவியர் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai