Enable Javscript for better performance
எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக் குழு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் திருவடிசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நல்லையா, மாவட்டக் குழு உறுப்பினர் நாகரத்தினம், வட்டக்குழு உறுப்பினர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, வீரப்பட்டிகணேசன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, 2013-2014ஆம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். நிகழாண்டில் விவசாயிகளுக்கு குறைந்தவட்டியில் பயிர்க் கடன் வழங்கவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில், மாவட்டக் குழு உறுப்பினர்கள், நகரத் தலைவர் ரங்கசாமி, வட்டக்குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் இளசைமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலர் காளிக்கண்ணையா உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். சங்க வட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai