சுடச்சுட

  

  எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு முப்பெரும் விழா

  By கோவில்பட்டி  |   Published on : 16th June 2015 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் மத்திய, மாநில எஸ்.சி. மற்றும் எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வெகுஜன மக்கள் கூட்டமைப்பு ஆகியன சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

  சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, சில்லாங்குளம் முத்துக்கருப்பன் அரிஜன மேல்நிலைப் பள்ளி நிர்வாகி கருப்பசாமிக்கு அம்பேத்கர் சுடர்ஒளி விருது வழங்கும் விழா என நடைபெற்ற இவ்விழாவுக்கு, எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் செந்தூர்பாண்டி, மாவட்டச் செயலர் சின்னராஜ், எஸ்.சி., எஸ்.டி. வெகுஜன மக்கள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மண்டலச் செயலர் விஜயன் வரவேற்றார்.

  எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.கருப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

  காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்டத் தலைவர் காமராஜ், தமிழ்நாடு போக்குவரத்து மாவட்ட அமைப்பாளர் சரவணன், எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாநிலச் செயலர் கிருஷ்ணன், துணைச் செயலர் லாசர், மாவட்டச் செயலர்கள் சுவாமிநாதன் (நெல்லை), ஸ்ரீராமர் (விருதுநகர்) ஆகியோர் பேசினர்.

  துப்புரவு பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய விகிதத்தை ரூ. 10 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும்; டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் மயான உதவியாளர்கள் படிப்புத் தகுதிக்கேற்ப மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் அந்தோணிராஜ், வட்டாரச் செயலர்கள் நடராஜன் (விளாத்திகுளம்), அரவிந்தராஜ் (ஓட்டப்பிடாரம்), சுடலைமணி (திருச்செந்தூர்) ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai