Enable Javscript for better performance
கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை இழந்தோர் மறுவாழ்வு அறக்கட்டளையினர்  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அறக்கட்டளை நிறுவனர் தலைவர் கணேஷ்ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த சோலைசாமி முன்னிலை வகித்தார்.

    மாற்றுத் திறனாளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையில் மட்டுமன்றி, அனைத்து தமிழக அரசுத் துறைகளிலும் காலி இடங்களை நிரப்புகையில் 1 சதவீத இடஒதுக்கீடு செய்ய வேண்டும்;

    தமிழக அரசுத் துறை பணியாளர் நியமன ஆணையம், தமிழக மருத்துவப் பணியாளர்கள் நியமன ஆணையம் மற்றும் பிற அரசுத் துறை தேர்வு ஆணையங்களால் தேர்வு செய்யப்பெற்ற பார்வை இழந்தோர் அவரவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    இதில், ரவிசந்திரன், முத்துராஜ், அந்தோணி, தயாநிதி, சந்திரபோஸ், வர்கீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai