Enable Javscript for better performance
கோவில்பட்டியில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

    By கோவில்பட்டி  |   Published on : 16th June 2015 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் திறப்பு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.

    விழாவுக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வீரபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராஜா, எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சென்னையைச் சேர்ந்த வி.பொன்னுப்பாண்டியன் கட்சி அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசினார்.

    இதையடுத்து மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி மாநகர தலைவர் அருள் ஆகியோர் பேசினர்.

    இதில், வடக்கு மாவட்டப் பொருளாளர் சீனிவாசன், கோவில்பட்டி நகரத் தலைவர் சண்முகராஜ், வட்டாரத் தலைவர்கள் ரமேஷ்மூர்த்தி (மேற்கு), பெரியதுரை (கிழக்கு), நடிகை விஜி சேகர், மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன், கட்சி நிர்வாகி திருப்பதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.காமராஜ் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai