சுடச்சுட

  

  கோவில்பட்டியில் நாளைமுதல் கூடுதல் பேருந்து நிலையம் செயல்படும்

  By கோவில்பட்டி  |   Published on : 16th June 2015 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளதையடுத்து, புதன்கிழமைமுதல் (ஜூன் 17) நகரப் பேருந்துகள் ராமசாமி தாஸ் பூங்கா பின்பகுதியிலிருந்தும், பிற பேருந்துகள் அனைத்தும் புறவழிச் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேலை உத்தரவு வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கவுள்ளன.

  இதையடுத்து, புதன்கிழமைமுதல் (ஜூன் 17) நகரப் பேருந்துகள் நகராட்சி ராமசாமி தாஸ் பூங்கா பின்புறம் உள்ள தாற்காலிக பேருந்து நிலையத்திலிருந்தும், பிற பேருந்துகள் புறவழிச் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai