Enable Javscript for better performance
சாத்தான்குளம் அம்மன் கோயிலில் கொடை விழா- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

    முதல்நாள் குடியழைப்பு, மாக்காப்பு சாத்துதல், சாஸ்தா பிறப்பு, அலங்கார பூஜை உள்ளிட்டவையும், 2ஆம் நாள் அருள்மிகு தேவி ஸ்ரீஅழகம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், அம்மனுக்கு மாதர் சங்கம் சார்பில் பட்டு எடுத்து வருதல், பாலாபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம், இரவு முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதல், தொடர்ந்து திருவிளக்கு பூஜை, அலங்கார பூஜை, அம்மன் கும்பம் அக்னி சட்டி எடுத்து நகர்வலம் வருதல், அம்மனுக்கு விசேஷ பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. 3 ஆம் நாள் பொங்கலிடுதல், மஞ்சள் நீராடுதல் மற்றும் சிறுவர், சிறுமியரின் நடனநிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai