சுடச்சுட

    

    திருச்செந்தூரில் விஷமருந்திய மதுரையை சேர்ந்தவர் சாவு

    By திருச்செந்தூர்  |   Published on : 16th June 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் விஷமருந்திய மதுரையைச் சேர்ந்தவர் திங்கள் கிழமை இறந்தார்.

    மதுரை வண்டியூர் வி.சி.எம் நகரைச் சேர்ந்த கணபதி மகன் சேர்மவிஜயராஜன் (39). அங்கு ஜூஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

    இவருக்கு கடன் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) திருச்செந்தூருக்கு வந்தார். பின்னர் கடற்கரையில் விஷம் குடித்துள்ளார். உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த அவரை கோயில் காவல் ஆய்வாளர் பி.பட்டாணி மற்றும் போலீஸார் மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக சேர்மவிஜயராஜன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை  இறந்தார்.

    இச் சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோயில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த சேர்மவிஜயராஜனுக்கு பிரபாவதி என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai