சுடச்சுட

    

    தூத்துக்குடியில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 16th June 2015 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெரு வியாபாரிகள் வாழ்வாதாரம் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, தூத்துக்குடியில் ஏஐடியூசி அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் தமிழரசன் தலைமை வகித்தார். மக்களவை முன்னாள் உறுப்பினர் அப்பாத்துரை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.

    இதில், ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவர் அழகுமுத்துபாண்டியன், மாவட்ட பொதுச் செயலர் கிருஷ்ணராஜ், மாவட்டப் பொருளாளர் சங்கரகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai