சுடச்சுட

    

    பைக்-வேன் மோதல்: மதபோதகர் உள்ளிட்ட 3 பேர் காயம்

    By சாத்தான்குளம்  |   Published on : 16th June 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே பைக் மீது வேன் மோதியதில் மதபோதகர் உள்ளிட்ட 3பேர் பலத்தகாயமடைந்தனர்.

    நகணை மேலத்தெருவைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ஞானதுரை (36).  மதபோதகரான இவர், ஞாயிற்றுக்கிழமை பைக்கில் மனைவி மற்றும் குழந்தையுடன் சாத்தான்குளம் வந்துகொண்டிருந்தாராம். பன்னம்பாறை அருகே வரும்போது சாத்தான்குளத்தில் இருந்து வந்த வேன், இவரது பைக் மீது மோதியதாம். இதில், ஞானதுரை, அவரது மனைவி, குழந்தை ஆகிய மூவரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai