சுடச்சுட

  

  பொதுவிநியோகத் திட்ட புகார்களை கட்செவி அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்

  By தூத்துக்குடி  |   Published on : 16th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட புகார்களை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.

  இதுகுறித்து திங்கள்கிழமை அவர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் 914 நியாயவிலைக் கடைகளில் குறைகள் இருந்தாலோ, ரேஷன் பொருள்களை கடத்தினாலோ படம் எடுத்து கட்செவி}அஞ்சல் மூலம் 9445000370 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பிவைக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

  தூத்துக்குடியில் பண்ணை பசுமை காய்கனி கடை தொடங்கப்பட்டு 288 நாள்கள் முடிவடைந்த நிலையில் இதுரை ரூ. 4 கோடிக்கு காய், கனிகள் விற்பனையாகி உள்ளது. ஓராண்டுக்குள் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 இடங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

  இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவில் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், சவரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி நாராயணசாமி என்பவரின் மனைவிக்கு ரூ. 74,013-க்கான இழப்பீட்டு தொகைக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai