சுடச்சுட

    

    "வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்'

    By தூத்துக்குடி  |   Published on : 16th June 2015 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் ஆன்-லைன் மூலம் புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து.நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் ஆன்-லைன் வழியாக  ஒருங்கிணைக்கப்பட்டு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த இணையதளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித் தகுதி பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு போன்ற பணிகளை ஆன்-லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, டிசம்பர் 2013முதல் மே 2015 முடிய உள்ள புதுப்பித்தல் காலக்கெடுவுக்குள் புதுப்பிக்கத் தவறிய மனுதாரர்கள் 18 மாத சலுகையில் ஆன்-லைன் மூலம் புதுப்பிக்கலாம்.

    இச்சலுகை புதுப்பித்தலுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவோ அல்லது மனு செய்யவோ தேவையில்லை. ஆன்-லைன் மூலம் இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் புதுப்பிக்கலாம்.

    புதுப்பித்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் (0461-2340159) தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai