சுடச்சுட

  

  தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட விவசாயிகள் குறைகளை கேட்டறியும் வகையில் மாதம்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் மாதத்துக்கான கூட்டம் வரும் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்களும், பாசன சங்கப் பிரதிநிதிகளும் மற்றும் விவசாயிகளும் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai