Enable Javscript for better performance
4ஆவது பைப்லைன் திட்டப் பணிகள் 85 சதவீதம் நிறைவு: மேயர்- Dinamani

சுடச்சுட

    

    4ஆவது பைப்லைன் திட்டப் பணிகள் 85 சதவீதம் நிறைவு: மேயர்

    By தூத்துக்குடி  |   Published on : 16th June 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டமான 4 ஆவது பைப்லைன் திட்டப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது என மாநகராட்சி மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீர் கொண்டுவரும் வகையில் மூன்று பைப்லைன் திட்டம் தற்போது செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மக்கள் பெருக்கம் காரணமாக தற்போது 4ஆவது பைப்லைன் திட்டம் செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

    மேலும், பக்கிள் ஓடையின் இருபுறமும் முள்புதர்கள், சாக்கடை கழிவு, மணல்திட்டுக்கள் என சுகாதாரக் கேடுடன் காணப்பட்ட இடத்தை, தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சீர்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் சாக்கடை மணல்களை விற்பதாக திமுகவினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 4ஆவது பைப்லைன் திட்டம் மூலம் மாநகரப் பகுதிக்கு விரைவில் குடிநீர் வழங்கும் திட்டமும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைவதும் உறுதி என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai