Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு காலஅவகாசம் வழங்காமலேயே பணி முடிக்க நிர்பந்திப்பது; சாத்தியமற்ற இலக்குகளை திணிப்பது; சமூக தணிக்கை என்ற பெயரால் அலுவலர்களின் ஊதியத்தில் பணம் பிடித்தம் செய்வது ஆகியவற்றைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணியிலிருந்து ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கச் செயலர் சின்னத்தம்பி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஹரிபாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கப் பொருளாளர் சிவராமகிருஷ்ணன், முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அலுவலகத்தைவிட்டு வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க கிளைத் தலைவர் அருணா சந்திரசேககர் தலைமை வகித்தார். செயலர் பழனிவேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    சாத்தான்குளம்: ஊராட்சி ஓன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  அரசு ஊழியர்கள் சங்க வட்டக் கிளைத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்.

    வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் து. செந்தூர்ராஜன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க வட்ட இணைச் செயலர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுமயில், மேற்பார்வையாளர்கள் சங்கத் தலைவர் சிவகுமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். வட்ட துணைத் தலைவர் இஸ்மாயில் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai